search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் மாவட்டத்தில் மழை"

    திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வந்தது. தமிழகத்தின் பிறபகுதிகளில் மழை பெய்தபோதும் திண்டுக்கல் மாவட்டத்தில் வறண்ட வானிலையே காணப்பட்டதால் பொதுமக்கள் குடிநீருக்காக அலைந்து திரிந்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் மிதமான சாரல் மழையினால் பூமி குளிர்ந்து உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தற்காலிக தீர்வு ஏற்படும்.

    திண்டுக்கல் 4.6, கொடைக்கானல் 4.3, பழனி 2.0, சத்திரப்பட்டி 7, நத்தம் 7.5, நிலக்கோட்டை 16, வேடசந்தூர் 0.3, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 0.3, காமாட்சிபுரம் 2.3, கொடைக்கானல் போட்கிளப் 5 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 49.3 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாய பணிகளுக்கு வேலை ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மலைகள் சூழ்ந்த பகுதியாக உள்ளது. இந்த மாவட்டத்தில் பெரியஅளவில் ஆறு, குளங்கள் எதுவும் இல்லை. எனவே மானாவரி நிலங்களில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் நடைபெறுகிறது.

    குறிப்பாக பருத்தி, நிலக்கடலை, எள், மக்காச்சோளம், உளுந்து ஆகியவை மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப் படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனதால் மானாவாரி நிலங்கள் அனைத்தும் தரிசாக காணப்பட்டது.

    எனவே விவசாயிகளும், இதனை நம்பியிருந்த விவசாய கூலித்தொழிலாளர்களும் மாற்று வேலைகளுக்கு திருப்பூர், கோவை போன்ற நகரங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்தது. அதோடு கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    வடகிழக்கு பருவமழை தொடங்கினால் ஓரளவு விவசாய பணிகள் நடைபெறும். அதற்கு முன்னதாகவே தற்போது மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சத்திரப்பட்டி, பழனி, ஆயக்குடி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை, எரியோடு, ஆர்.கோம்பை பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் ஏர்பூட்டி விதை விதைக்கின்றனர்.

    ஒட்டுமொத்தமாக விதைவிதைப்பு பணி நடைபெறுவதால் விவசாய பணிகளுக்கு வேலை ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க விவசாய கூலித்தொழிலாளர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்ற செல்கின்றனர். அங்கு குறைந்த கூலி என்றாலும் அதிகநேரம் ஓய்வு எடுப்பதால் இந்த வேலைக்கு ஏராளமான கூலித்தொழிலாளர்கள் சென்று விடுகின்றனர்.

    இது போன்ற நிலையால்தான் மாவட்டத்தில் கூலி ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் எந்திரம் மூலம் தங்களது பணிகளை தொடங்க உள்ளனர்.

    ×